ஈரோட்டில் அரசு ஊழியரை தாக்கி லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியார்நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அடையாள அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இவர் சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டதால் சென்ற 12ஆம் தேதி ஈரோட்டிற்கு ரயில் மூலம் வந்து அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவர் பெரியார் நகர் பகுதியில் நடந்த சென்று கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் ஐந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாததால் பிரகாஷை தாக்கி அவரிடம் இருந்த ஒரு பையை வழிபறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். அந்த பையில் செல்போன், லேப்டாப், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை பிரகாஷ் வைத்திருந்திருக்கின்றார். இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இதில் வழிப்பறி செய்தவர்கள் மனோ-21, ஆகாஷ்-20, பிரகாஷ்-19 மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஐந்து பேரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை மீட்டார்கள்.