Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் நடைபெற்ற பாரம்பரிய தாயம்போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்….!!!!!!!!

 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக நொண்டி, பச்சை குதிரை, தாயம், பம்பரம், காத்தாடி, எறிபந்து, வண்டி உருட்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் இருக்கிறது. இதில் தாயம் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளும் வீட்டிற்கு வெளியே விளையாடுவதாகும். ஆனால் செல்போன் மோகம் காரணமாக தற்போது பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அழிந்து கொண்டிருக்கிறது. செல்போனை கையில் எடுத்தால் சிறுவர்கள் வெளியே கூட வருவதில்லை. அந்த அளவிற்கு செல்போனில் மூழ்கி இருக்கின்றன. இதில் சிலருக்கு பாரம்பரிய விளையாட்டுகளின் பெயர்கள் கூட தெரிவதில்லை. இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுப்பதற்காகவும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காகவும் ஈரோட்டில் தாயம் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பதற்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக நேற்று 250 பேருக்கு தாயம் போட்டி ஈரோடு பெரியார் நகரில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 40 ஜோடிகள் ஒரே நேரத்தில் விளையாடும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று தாயகட்டைகளை உருட்டி ஆட்டத்தில் காய்களை  நகர்த்தி தங்களை திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். பல்வேறு கட்டமாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களும், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையை 2500, 1000 மதிப்புள்ள பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.  தாயகட்டையின் அரசி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இது பற்றி போட்டியில் பங்கேற்ற பெண்கள் பேசும்போது, இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் விளையாடுவதற்கு கூட நேரமும் சேர்த்து விளையாட ஆட்களும் இல்லாத சூழலில் இது போன்ற போட்டியில் பங்கேட்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மன அழுத்தம் குறைகின்றது என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |