வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈ.பி.பி. நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கும் புவனேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் புவனேஸ்வரி அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று புவனேஸ்வரி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் புவனேஸ்வரியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது புவனேஸ்வரி வாயில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புவனேஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ளதொடர்பு இருந்ததாகவும், இதனால் சுரேஷ் புவனேஸ்வரியை விட்டு பிரிந்து சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் புவனேஸ்வரியை எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.