தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முகாம்களுக்கு வெளியே வாழும் 12,553 ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களையும் ஒரு தாய் மக்கள் என அரவணைத்து அரசு காக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.