இந்தியாவில் ஈவு இரக்கமற்ற கொடூர அரசை மோடி நடத்தி வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெறும் அரசியல் எழுச்சி மாநாட்டில் வைகோ கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், உரிமைக்காக போராடுபவர்களை சிறையில் அடைக்கும் ஈவு இரக்கமற்ற கொடூர அரசை மோடி நடத்திவருகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் சிஏஏவுக்கு எதிராக போராடிய 52 பேரை பலியாகியுள்ளார் மோடி, லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். அதனை அவர் கண்டு கொள்ளாமல் தன் வேலையில் குறியாக இருக்கிறார் என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.