Categories
தேசிய செய்திகள்

ஈவு இரக்கமின்றி…! நாயை காரில் கட்டி இழுத்து சென்ற மருத்துவர்….. கொடூரமான video….!!!!

மருத்துவர் ஒருவர் ஈவு இரக்கமின்றி தனது காரில் தெரு நாயை கட்டி இழுத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் தன் காரில் நாயை கட்டி சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த நாய் காரின் வேகத்தை ஈடு செய்ய முடியாமல் பின்னாலேயே ஓடியுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் காரை வழிமறித்து, நிறுத்தி நாயை அவிழ்த்து விட்டுள்ளனர். காயத்துடன் இருந்த அந்த நாயை ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சை அளிக்க கொண்டு சென்றுள்ளனர். அந்த மருத்துவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |