தேவையான பொருட்கள் :
காய்ந்த மிளகாய் 50 கிராம்,
உளுந்தம் பருப்பு 100 கிராம்,
கடலைப் பருப்பு 100 கிராம்,
கருப்பு எள்ளு 50 கிராம்
பெருங்காயத் தூள் 1 ஸ்பூன்
கறிவேப்பிலை இரண்டு கொத்து
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் காய்ந்த மிளகாய் , உளுந்தம் பருப்பு , கடலைப் பருப்பு , கருப்பு எள்ளு பெருங்காயத் தூள் , தேவையான அளவு உப்பு , கறிவேப்பிலை அனைத்தையும் எண்ணையில் வறுத்து பொடிசெய்தால் இட்லியை மேலும் சுவை மிக்கதாகும் இட்லி பொடி தயார். நீங்கள் நெய்யில் கலந்து இட்லியை தொட்டுச் சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடே இல்லை.