வாட்ஸ் ஆப்பில் மிகச் சுலபமாக நீங்கள் பணம் அனுப்பும் வசதி மற்றும் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அனைவராலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் ஆப். இதில் சேட்டிங் மட்டுமல்லாமல், வீடியோ கால், குரூப் கால் போன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டன. மேலும் வாட்ஸ் ஆப் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸ் ஆப் இருக்கும்.
தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு நிறைய வசதிகள் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அதில் முக்கியமான ஒன்றுதான் பணம் அனுப்பும் வசதி. இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பும் வசதி இருப்பதே இன்னும் பலருக்கு தெரியவில்லை. இந்த வசதி வாட்ஸ் ஆப் காண்டாக்டில் இருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகச் சுலபமாக நீங்கள் பணம் அனுப்பவும், பெறவும் முடியும்.