கடந்த 2019 -ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டினர் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையின் மட்ட குளியா என்னும் நகரை சேர்ந்த முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ்(38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பதுர்தீனை நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பதுர்தினை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.