Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளே கொடூரம்… தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்.. சிசிடிவியில் பதிவான பதற வைக்கும் காட்சிகள்..!!

இந்தோனேஷியாவில் தேவாலயத்தின் வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் 10 நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் உள்ள Makkasar என்ற நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் இன்று ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளிற்கான பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பின்பு தேவாலயத்தில் இருந்து வெளியில் வந்தவர்களை தற்கொலை தாக்குதல் நடத்துபவர்கள் இருவர்  குறிவைத்து தாக்கியுள்ளனர்.

இதில் 10 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த தாக்குதலினால் சிலரது உடல் பாகங்கள் தெறித்து சிதறியுள்ளது. இதனைத்தொடர்ந்து சிதறிய உடல் பாகங்களை அடையாளம் காண்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/demokrasiAbal2/status/1376043071171817477

இது குறித்து தேவாலயத்தின் பாதிரியார் Wilhemus Tuluk கூறியுள்ளதாவது, தேவாலயத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் சந்தேகப்படும் படி வந்த ஒரு நபர் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து திடீரென்று  தேவாலயத்தினுள் புக முயன்றதாக கூறியுள்ளார்.

மேலும் இதனால் சில பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேவாலயத்தின் நுழைவு வாசலில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது அங்கிருந்த சிசிடிவி கேமராவில்  பதிவாகியிருக்கிறது. அக்காட்சியில் குண்டு வெடித்தவுடன் சாலையின் நடுப்பகுதியில் தீ ஏற்பட்டு பொருட்கள் சிதறும் காட்சிகள் உள்ளது.

Categories

Tech |