Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையில் இதனை அனுமதிப்பாரா…? பிரதமரின் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்…!!

பிரிட்டன் பிரதமர் ஈஸ்டர் பண்டிகையில் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையில் தங்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்பை  மக்களுக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது தங்களின் பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டிகள் பாசத்தோடு அணைத்துகொள்வதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா நிலவரம் தற்போது எவ்வாறு இருக்கிறது என்ற தகவல்களை அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளியிடங்களில் எத்தனை நபர்கள் வரை சந்திக்க வாய்ப்புள்ளது என்பது போன்ற விதிமுறைகள் விதிக்கப்படும் என்று அமைச்சர்கள் வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். அதாவது மக்கள் தங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களை ஈஸ்டர் பண்டிகையில் சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம் என்பதே இதன் அர்த்தமாகும்.மேலும் வரும் திங்கட்கிழமை அன்று பிரதமர் இதுபற்றிய தகவலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது வரை ஆறு நபர்கள் மட்டும் தான் வெளியில் சந்திக்கலாம் என்று விதி இருக்கிறது. இந்த விதியானது ஏப்ரல் மாதம் முதல் 2 முழு குடும்பங்களும் சந்தித்துக் கொள்ளலாம் என்று மாற உள்ளது. மேலும் ஒரு குடும்பத்தில் இத்தனை நபர்கள் தான் சந்திக்க முடியும் என்ற கட்டாயமில்லை. எனினும் உறவினர்கள் வெவ்வேறான இடங்களில் நீண்ட தொலைவில் வசித்தால் அவர்கள் சந்தித்துக் கொள்ள இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் தொலை தூர பயணங்கள் குறித்த விதிமுறைகள் தற்போது வரை மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |