Categories
சினிமா தமிழ் சினிமா

ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட தயார்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிடத் தயார் என திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட தயார் என்று திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஓடிடியில் வெளியாகாது என தயாரிப்பாளர் நேரில் சந்தித்து உறுதி அளித்ததால் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். இந்தியாவுக்கு வெளியே ஓடிடியில் ஈஸ்வரன் வெளியாகும் என முதலில் அறிவித்த நிலையில் படக்குழு பின் வாங்கியுள்ளது.

அவ்வாறு நடந்தால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குறையும். அதுமட்டுமன்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதால் ஈஸ்வரன் படத்தை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் கூறியிருந்தனர். அதனால் ஈஸ்வரன் பட தயாரிப்பாளர் நேரில் சந்தித்து உறுதி அளித்ததால் படத்தை வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |