Categories
சினிமா தமிழ் சினிமா

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் செய்த அசத்தல் சாதனை… செம கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்…!!!

ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இந்நிலையில் ஈஸ்வரன்  படத்தில் இடம்பெற்ற ‘மாங்கல்யம்’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு மற்றும் பாடகி ரோஷினி இருவரும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |