Categories
மாநில செய்திகள்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கொரோனா உறுதி…. தனியார் மருத்துவமனையில் அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மத்தியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவால் சில அரசியல் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |