Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உக்ரேனில் கர்நாடக மாணவன் உயிரிழக்க இதுதான் காரணம்…!!” முன்னாள் முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு….!!

உக்ரைன் ரஷ்ய போர் தொடர்ந்து 8வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு மருத்துவம் படித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீனின் மரணத்திற்கு நீட் தேர்வு தான் காரணம் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “உக்ரைன் ரஷ்யா போரில் மரணம் அடைந்த மாணவன் நவீன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 96 சதவீதம் மதிப்பெண்களும் யுபிஎஸ்சி தேர்வில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஒரு சாதாரண கிராமப்புற மாணவ மதிப்பெண்களை பெறுவது என்பது விஷயமல்ல. அவ்வாறு இருக்கையில் நீட் தேர்வு காரணமாக அவருக்கு இந்தியாவில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது தன்னுடைய மருத்துவக் கனவை நனவாக்கிக் கொள்ள உக்ரைன் சென்றுள்ளார். இப்போது சொல்லுங்கள் மாணவனின் மரணத்திற்கு யார் காரணம்.? இங்கே மருத்துவம் படிக்க விரும்பும் பணக்கார மாணவர்களுக்காக டுடோரியல் சென்டர்கள் காளான் போல் முளைத்துள்ளன. ஆனால் ஏழை மாணவர்களுக்கு எதுவும் இல்லை. எனவே இம் மாணவனின் மரணத்திற்கு நீட் தேர்வு தான் முக்கிய காரணம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |