உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதங்கள் போர் தொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த போர் ஆகும் 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. மேலும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து கவலையுடன் நாடு திரும்பினர். எனவே மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் படிப்புகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளை அக்டோபரில் நேரடியாகவும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு உக்ரைன் கல்வி நிறுவனங்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. ஆனால் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் உக்கிரமாக நடைபெற்று வருவதால் தங்கள் பாதுகாப்பு குறித்து இந்திய மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதனைப் போல உக்ரைன் திரும்பாவிட்டால் கல்வி பாழாகிவிடும் என்று கூறுகின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் தவிர்த்து வருவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.