Categories
தேசிய செய்திகள்

உக்ரேனில் மாணவர்களை மீட்க…. ருமேனியா சென்ற ஏர் இந்தியா விமானம்…!!!

 ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு போர் நடைபெற்றதன் காரணமாக விமானம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. உக்ரைன் நாட்டை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் உதவியின் மூலம் இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யா, உக்ரேன் போரால்  உக்ரேனில் தவிக்கும் இந்தியர்களை ரொமேனியா போலந்து எல்லைகள் வழியாக மீட்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வெளியுறவு அமைச்சகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் டெல்லியிலிருந்து ருமேனியாவின் புக்கரெஸ்ட் மற்றும் ஹங்கேரி புடாபெஸ்ட் நகரங்களுக்கு இந்த இரண்டு விமானங்களை டாட்டா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியது. இதனையடுத்து தற்போது இந்த விமானம் ருமேனிய விமான நிலையத்தை அடைந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த A1-1943 விமானம் 256 பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது. இந்த விமானம் டெல்லியில் இருந்து சென்றுள்ள நிலையில் மற்றொரு விமானம் மும்பையில் புறப்படவுள்ளது.

 

Categories

Tech |