Categories
உலக செய்திகள்

“உக்ரேனை ஆக்கிரமிப்பதை தவிர வேறு வழி தெரியல”…. அப்பாவி பொதுமக்கள் இலக்கல்ல…. புதின் அதிரடி…!!

உக்ரைனை ஆக்கிரமிப்பதை தவிர ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் நோட்டா அமைப்புடன் சேர்வதற்கான பணிகளை துவங்கியுள்ளது. இதனால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா உக்ரேனை மிக கடுமையாக எச்சரித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைவீரர்களை குவித்ததோடு மட்டுமின்றி போர் தொடக்கத்தின் முதல் கட்டமாக உக்ரைனிலுள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளது.

இவ்வாறு இருக்க ரஷ்யா நேற்று அதிரடியாக உக்ரேனின் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய கூறியதாவது, தங்கள் நாட்டின் ராணுவத்திற்கு உக்ரைனின் பொதுமக்கள் இலக்கல்ல என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரேனை ஆக்கிரமிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |