ரஷ்யப் படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை சுற்றி பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறி உக்ரைன் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து அந்நாட்டின் துணை பிரதமர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ரஷ்ய படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை சுற்றி பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உக்ரைன் நாட்டின் துணை பிரதமரான இரினா தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது ரஷ்ய படைகள் பழைய மற்றும் மோசமாக பராமரிக்கப்பட்ட ஆயுதங்களை அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் உருவாக்கியுள்ள ராணுவ பகுதிக்கு கொண்டு செல்கிறார்கள்.
இதனால் செர்னோபில் அணுமின் நிலையத்தின் சிதைந்த 4 ஆவது அணு உலையை சுற்றி கட்டப்பட்டிருக்கும் கட்டுமானத்தை சேதப்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உக்ரேனோடல்லாமல் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் சூழலும் உள்ளது என்று உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் எச்சரித்துள்ளார். ஆகையினால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் செர்னோபில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.