உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 2ஆசிரியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நடைபெற்று வருகிறது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைனின் எல்லைகளில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்து வந்துள்ளது.
இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. மேலும் நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. தற்போது பல்வேறு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்க அதிபர் எச்சரிக்கை என பல தரப்பு செயல்பாடுகளுக்கு பின்னர் நடைபெற்று வந்த போர் பயிற்சி நிறைவு பெறுவதாகவும் படை முகாம்கள் திரும்புகின்றன எனவும் அறிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் எல்லையில் தனது படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறியதற்கு எந்த ஓரு ஆதாரமும் இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில் உக்ரைன் மீது படை எடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் ஒரு ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா கிராமத்தில் இன்று திடீரென குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதல் அங்குள்ள மழலையர் பள்ளியில் நடைபெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்ட தாகும் இந்த தாக்குதலில் அங்கு பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் காயமடைந்ததாகவும் தாக்குதலுக்குள்ளான கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்று இன்னும் முழுதாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் அமெரிக்கா ரஷ்யா தான் இந்த தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள்? உண்மையிலேயே ரஷ்யா தான் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியதா ? அல்லது வேறு யாரேனும் இந்த தாக்குதல்களை நடத்தினார்களா ? என பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை. இந்நிலையில் உக்ரைன் கட்டுப்பாட்டிலுள்ள கிராமத்தின் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதல் மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.