Categories
உலக செய்திகள்

உக்ரேன் “புதிய வைரசை” உருவாக்குவது…. குற்றச்சாட்டை முன்வைத்த ரஷ்யா…. நிராகரித்த ஐ.நா சபை….!!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா உக்ரைன் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.

உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 17 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இவ்வாறு இருக்க அமெரிக்க பாதுகாப்பு துறை உதவியுடன் உக்ரைன் ஆய்வகங்களில் வைத்து உயிரி ஆயுதத்தைத் (புதிய வைரஸ்) தயாரித்து வந்ததாக ரஷ்யா அந்நாட்டின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ஐ.நா சபையில் நடந்த கூட்டத்தில் மீண்டும் ரஷ்யா உக்ரேன் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆனால் ஐநா பாதுகாப்புச்சபை உக்ரேன் மீதான ரஷ்யாவின் மேலே குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

Categories

Tech |