ரஷ்யா கூடிய விரைவில் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக எழுந்த தகவலையடுத்து அமெரிக்கா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே நீண்ட காலமாக கிரீமியா தொடர்பாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து ரஷ்யா தனது லட்சக்கணக்கான படைவீரர்களை உக்ரேனின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா உக்ரேன் மீது எந்த நேரமும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிபர் புதினை பலமுறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா உக்ரேனின் கிளிவ் பகுதியிலுள்ள தங்களது தூதரகத்தை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு வெளியேற்றப்படும் தூதரக அதிகாரிகளிலிருந்து சிலரை மட்டும் போலந்தின் எல்லைப்பகுதியில் நியமிக்கவுள்ளதாகவும், அதன் மூலம் உக்ரேனுடன் ராஜ தந்திர உறவை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.