உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிற்கும், நோட்டாவுக்குமிடையே நேரடியாக சண்டை ஏற்பட்டால் அது 3 ஆம் உலகப்போராகத்தான் அமையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 17 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆகையினால் இருதரப்பு மோதலில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கும் நோட்டாவிற்குமிடையே நேரடியாக சண்டை ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப் போராக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார். அவ்வாறு ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.