Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: இந்தியாவின் ஆதரவு ரஷ்யாவிற்கா…? வீடியோவில் கசிந்த ரகசியம்…!!

நாளை ஏவப்படவுள்ள ஒன் வெப் ராக்கெட்டில் இந்தியா கொடியை தவிர அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொடிகளை மறைப்பது தொடர்புடைய வீடியோவை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்ஸின் தலைவர் வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 8 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க ரஷ்யாவின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. இதனால் சர்வதேச விண்வெளி நிலையம் கேள்விக்குறியாகும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

இதன் விளைவாக வெள்ளிக்கிழமை ஏவப்பட்டவுள்ள ஒன் வெப் ராக்கெட்டிலிருந்து இந்தியாவின் கொடியை தவிர அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கொடிகளை பைகோனூர் ஏவுதளத்திலுள்ள தொழிலாளர்கள் மறைப்பது தொடர்புடைய வீடியோவை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்ஸின் தலைவர் டிமிட்ரி வெளியிட்டுள்ளார்.

இந்த ஒன் வெப் திட்டத்தின்கீழ் 36 செயற்கைக்கோள்களை சோயூஸ் ராக்கெட் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளிக்கு சுமந்து செல்கிறது. இந்தத் திட்டம் விண்வெளி சுற்றுப்பாதையில் 648 செயற்கைக்கோள்களை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |