உக்ரைனின் வான் பரப்பில் விமானங்கள் பறக்கக் தடை விதிக்கும்படி அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நோட்டா அமைப்பு நிராகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக அதிபயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்க நோட்டா அமைப்பிடம் தங்களது வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும்படி உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை நோட்டா அமைப்பு ஏற்றுக்கொண்டால் உக்ரைன் வான் பரப்பில் தடையை மீறி நுழையும் விமானங்களை அதன் படைகள் சுட்டு வீழ்த்தலாம்.
ஆனால் உக்ரேன் அதிபரின் கோரிக்கையை நோட்டா அமைப்பு நிராகரித்துள்ளது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி நோட்டா அமைப்பிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்று முதல் இறக்கும் மக்கள் அனைவரும் நோட்டா அமைப்பின் பலவீனாத்தால் தான் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி உக்ரேன் மீது தாக்குதல் நடத்துவதற்கான பச்சைக் கொடியை நோட்டா தலைமை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.