உக்ரேன் மீதான 2 ஆம் நாள் போருக்கு பிறகு ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்நாடு வர மறுத்துள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி தலைநகர் கீவையும் ரஷ்ய படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள்.
இந்நிலையில் கிரெம்பிளின் என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் அதிபர் மாளிகை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உக்ரைன் மீதான 2 ஆம் நாள் போருக்கு பிறகு ரஷ்ய அதிபர் புதின் போரை நிறுத்திவிட்டு அந்நாட்டை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் ரஷ்யாவின் அழைப்பை மறுத்து அமைதிப் பேச்சு வார்த்தையை நிராகரித்துள்ளது. இதனால் அதிபர் புதின் மீண்டும் போரை தொடங்கிவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.