உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா சபையில் இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதில் நடந்த வாக்கெடுப்பில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா தங்களது வீட்டா அதிகாரத்தை பயன்படுத்தி ஐ.நா சபையின் தீர்மானத்தை முறியடித்துள்ளது. இதனால் ஐ.நா சபையின் உக்ரேனின் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.