உக்ரேன் போரை முன்னிட்டு ரஷ்யாவிலுள்ள தங்களது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது 15 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த அத்துமீறும் செயலுக்கு அந்நாட்டின் மீது உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிலுள்ள தங்களது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக மெக்டொனால்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையே ஆப்பிள், நெட்பிளிக்ஸ், லிடிஸ் போன்ற பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.