Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “ரஷ்யா படையெடுப்பை” துவங்கிட்டு…. பொங்கியெழுந்த இங்கிலாந்து மந்திரி….!!

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்க தொடங்கி விட்டதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் கூறியுள்ளார்.

ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிரிமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி ரஷ்யா தங்களது படைகளையும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளில் குவித்துள்ளது. இந்த நிகழ்வுக்கு உலகநாடுகள் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா உக்ரேன் மீதான படையெடுப்பை துவங்கி விட்டது என்று இங்கிலாந்தின் சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |