ரஷ்யா உக்ரைனின் பல இடங்களை கைப்பற்றியுள்ளதாக, பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு தெரியப்படுத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.மேலும் உக்ரைனின் கிழக்கு பகுதியை ரஷ்ய ராணுவ படைகள் முழுவதும் கைப்பற்றியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு தெரியப்படுத்தியுள்ளது.
அதன்படி கைப்பற்றப்பட்ட நகரங்களின் மீது ரஷ்ய படைகள் கடந்த வாரம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் 140 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது.