உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஒரு மாதங்களை கடந்த நிலையில் உக்ரைன் மக்கள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். உக்ரைன் நாடு முழுவதையும் கைப்பற்றுவதை ரஷ்யா திட்டமாக கொண்டு உள்ளது. ஏற்கனவே தலைநகர் கீவ் பகுதியை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் அங்கு ஏராளமான அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மக்களை ரஷ்யா இனப்படுகொலை செய்கிறது என உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதோடு உக்ரைன் மக்களை மனிதர்கள் என்று கூட பாராமல் கொன்று குறிப்பதாகவும் அவர்களின் உடலுக்குள் வெடிமருந்துகளை வைத்து அதன் மூலம் மேலும் சேதத்தை அதிகப்படுத்தவும் ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தில் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் குறித்து அறிய ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் வேர்சுலா வெண் டார் லயன் உக்ரைன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.