உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யா உடன் இணைக்கப்படுவதாக அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி படையெடுத்துள்ளது. 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரில் உக்ரைனில் சில பகுதிகள் ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு மேற்கு உக்ரைணை முக்கிய நகரங்களில் ரஷ்யப்படைகள் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்ற லுஹான்ஸ்க், டொனாக்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா உக்ரைன் பிராந்தியங்களை தங்களுடன் இணைத்துக் கொள்ள வழி செய்யும் விதமாக அந்த பகுதிகளில் ரஷ்யா பொது வாக்கெடுப்பு நடத்தி உள்ளது.
நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு ரஷ்யாவிற்கு ஆதரவாக தான் முடிவுகள் வெளியாகும் என மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் அதன்படி இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணி நான்கு காந்தியங்களிலும் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்காக வாக்களித்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து உக்ரைன் இந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவுடன் இணைந்து கொள்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதின் இன்று வெளியிட்டுள்ளார். மாஸ்கோவின் கிரெம்லின் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்ய பகுதிகளாக அதிபர் புதின் பிரகடனப்படுத்தியுள்ளார்.