Categories
உலக செய்திகள்

“உக்ரைனின் பீரங்கி பழுதுபார்க்கும் ஆலை மீது”… ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. வெளியான தகவல்…!!!!!!!

உக்ரைன் மற்றும்  ரஷ்யாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போரானது மூன்றரை மாதங்கள் கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே இருக்கிறது. ரஷ்ய படை வீரர்கள் இழப்புகளை சந்தித்த போதிலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறது. இந்த போரில் இரு நாட்டின் வீரர்கள் மற்றும் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை காலி செய்துவிட்டு வேறு நாட்டிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து இருக்கின்றன.

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் போரை நிறுத்தும் முயற்சியில் ஒரு பகுதியாகவும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ரஷ்யாவிலிருந்து பல்வேறு பெரிய நிறுவனங்களும் வெளியேறி வருகின்றன. மேலும் போரானது நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது. இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சிவிரோடோனெட்ஸ்க் நகர் அருகே படைவீரர்கள் முகாமிட்டுள்ள பகுதிக்கு மீண்டும் சென்றிருக்கின்றனர். போரை முன்னெடுத்து செல்லும் வீரர்கள் தைரியம் வாய்ந்தவர்கள் மற்றும் கடின உழைப்பாளர்கள் என புகழ்ந்து இருக்கின்றனர்.

இந்த நிலையில்  உக்ரைனுக்கு எதிரான இந்த போரில் அந்த நாட்டின் கிழக்கு நகரான நொவோமோஸ்கோவிஸ்க்கில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கின் மீது ரஷ்யாவின் 3 ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கின்றன என அந்த மண்டல நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு நகரான சிவிரோடோனெட்ஸ்க்கை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சியாக போர் நடைபெறும் பிற பகுதிகளில் இருப்பிலுள்ள படை வீரர்கள் அந்த நகருக்கு செல்லும்படி ரஷ்யா அனுப்பி கொண்டிருக்கின்றது. இதனை லூகான்ஸ்க் நகர கவர்னர் செர்ஹை கைடாய் உறுதிப்படுத்தியிருக்கிறார். சிவிரோடோனெட்ஸ்க் நகரின் பல பகுதிகளில் ரஷ்யா  கட்டிற்குள் கொண்டு வந்த போதிலும் முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வில்லை என கவர்னர் செர்ஹை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ரஷ்யாவின் ஸ்கேனர் ஏவுகணைகள் உக்ரைனின் கார்கீவ் நகரில் உள்ள பீரங்கி பழுது பார்க்கும் ஆலையின் மீதும் தாக்குதல்களை நடத்தி இருக்கின்றனர். இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று கூறியுள்ளது. இதுபற்றி உக்ரைனின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் பேசும்போது உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்கிவ்வின்  வடக்கே சூழ்நிலையானது முற்றிலும் கடினமான ஒன்றாக இருக்கிறது. மேலும் நகரை  நெருங்கக் கூடிய படைகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறது நகரின் மீது மீண்டும் குண்டுகளை வீசும் முயற்சித்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |