உக்ரைனின் மிக பெரிய அணு ஆயுத உலைக்கு அருகே ரஷ்ய நேற்று அதிரடியாக பல ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து ஐந்து மாதங்களாக நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த போரில் இரு தரப்பிலும் வீரர்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போரானது தொடர்ந்து வருகின்றது. இது குறித்து உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது, “உக்ரைன் நாட்டின் தெற்கு நகரான மிகோலெய்வ் மீது சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புகளை ரஷ்யா நேற்று நடத்தியுள்ளது. உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்த போதும் அந்நாட்டின் மிக பெரிய அணு ஆயுத உலைக்கு அருகே உள்ள நகரம் ஒன்றின் மீதும் ரஷ்யா நேற்று அதிரடியாக பல ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த ஏவுகணை தாக்குதல் என்னால் கடந்த 24 மணிநேரத்தில் பொது மக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து உக்ரைனின் 9 பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
மேலும் பிரிவினைவாதிகளால் பிடிக்கப்பட்ட கிழக்கு நகரான டோனெட்ஸ்க் மீதும் ஏவுகணை வீச்சுகள் நடந்துள்ளன. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சமீப வாரங்களில் அடிக்கடி தாக்குதல்களுக்குள்ளான மிகோலெய்வ் நகரின் 2 மாவட்டங்கள் மீதும் நேற்று குண்டு மழை பொழிந்துள்ளன. நிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரின் மைய பகுதியில் உள்ள நிகோபோல் நகர் மீது 60 ஏவுகணைகளை ரஷ்ய ராணுவ படைகள் நேற்று வீசியுள்ளன. 1.07 லட்சம் பேர் வசிக்க கூடிய இந்த நகரில் 50 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் சில ஏவுகணைகள் மின் இணைப்புகள் மீது தாக்கியதில், மக்கள் பலர் மின் வினியோகமின்றி தவித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நீப்பர் ஆற்று பகுதியில் அமைந்துள்ள நிகோபால் நகரத்தின் அருகே அந்நாட்டின் மிக பெரிய அணு உலை அமைந்துள்ளது. இந்த போரின் தொடக்கத்தில் ரஷ்ய ராணுவ படைகள் கைப்பற்றியுள்ளன. இங்கு போர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட நிபுணர்கள் சிலர், இந்த பகுதியை உள்நோக்கத்துடன் ரஷ்ய தாக்கி வருகின்றது. உக்ரைனை ஒரு கடின சூழ்நிலைக்கு தள்ளவே ரஷ்ய இப்படி செய்கின்றது” என உக்ரைன் அதிபர் அலுவலகத்தில் கூறியுள்ளது.