Categories
உலக செய்திகள்

உக்ரைனியர்களின் கர்ஜனை நீங்கள்தான் ஜெலென்ஸ்கி…. பிரித்தானிய பிரதமர் ஓபன் டாக்…..!!!!!

உக்ரைனுக்கு திடீரென்று விரைந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அதிபர் ஜெலென்ஸ்கியை மனதார புகழ்ந்து உள்ளார். அதாவது உக்ரைன் மக்கள் சிங்கம் என்றால் அதன் கர்ஜனை நீங்கள் என்று ஜெலென்ஸ்கியிடம், போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீரென்று விரைந்த போரிஸ் ஜோன்சன், விளாடிமிர் புடினின் துருப்புகளை விரட்டி அடிக்க 120 கவச வாகனங்கள் மற்றும் புதிய கப்பல் தடுப்பு ஏவுகணை அமைப்புகளையும் உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இருதலைவர்களும் நேருக்கு நேர் அமர்ந்து உக்ரைனின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிரதமர் போரிஸ் ஜோன்சன் போர் சூழல் மிகுந்த கீவ் நகரிலிருந்து வெளியேறும் வரையில் மொத்த திட்டமும் ரகசியம் காக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இருந்தாலும் பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகம் தவறுதலாக தமது ட்விட்டர் பக்கத்தில் போரிஸ் ஜோன்சனின் உக்ரைன் விஜயம் தொடர்பில் தகவல் பகிர்ந்திருந்தது.

உக்ரைன் ராணுவத்தினரின் துணிச்சலுக்கு தலைவணங்குவதாக சொல்லிய போரிஸ் ஜோன்சன், சில தினங்களில் உக்ரைன் கைப்பற்றப்படலாம் எனவும் சில மணி நேரங்களில் கீவ் நகரம் அவர்களின் படைகளிடம் சரணடையும் எனவும் ரஷ்யர்கள் நம்பினர். அவர்கள் கனவு பலிக்காமல் போயுள்ளது என்று அவர் கூறினார். அத்துடன் கீவ்நகரின் முக்கியமான பகுதிகளுக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன், அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நடந்து சென்று பார்வையிட்டுள்ளார். ஆயுதங்கள் மட்டுமல்லாது உக்ரைனுக்கான பொருளாதார ஆதரவையும் போரிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |