உக்ரைனுக்கு ஏர்-இந்தியா விமானம் ஒன்றை அனுப்பி மாணவர்கள், குடிமக்களை உள்பட பலரை ஏற்றிக்கொண்டு நாடு திரும்ப உள்ளது.
உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்ய நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்கள் உள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க மற்றும் நோட்டு அமைப்புகள் நிராகரித்து விட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷ்ய படைகள் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிழக்கு உக்ரேனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணவோ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு உடந்தையாக எந்த விதமான பதிலும் ரஷ்ய அதிபர் மாளிகையில் தெரிவிக்கவில்லை. தற்போது உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்களை அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளன. மேலும் இந்தியா உள்பட பல நாடுகள் தங்களுடைய குடிமகக்களை நாடு திரும்ப கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது இந்திய அரசு உக்ரைனுக்கு ஏர்-இந்தியா விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்கள், குடிமகக்கள் உள்பட பலரை ஏற்றிக்கொண்டு நாடு திரும்ப உள்ளது. இதில் 241 பயணிகளுடன் ஏர் இந்திய சிறப்பு விமானம் டெல்லிக்கு இன்று புறப்பட உள்ளது. அந்த விமானம் 10.15 மணிக்கு இந்தியா வர வேண்டும். ஆனால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக இரவு 11 மணிக்கு விமானம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.