உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியிருந்தார்கள். அவர்கள் திரும்பி இருந்தாலும் கூட அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவர்கள் படித்து வந்த மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை என்பது தான் நீடித்தது.. ஏனென்றால் இன்னும் உக்ரைனில் போர் முடியவில்லை. எனவே அங்கு திரும்பி சென்று தங்களது கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. போர் எப்போது முடியும்? இவர்களது ஆவணங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா? என்பது கேள்விக்குறியான விஷயமாக தான் இருக்கிறது..
இதன் காரணமாகத்தான் இந்தியாவில் மாணவர்கள் தங்களது படிப்பை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும் இந்திய பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவமனை கல்லூரிகள் எதுவாக இருந்தாலும், அதில் தொடர்ந்து படிப்பினை தொடர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.. உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு விசாரிக்கப்பட்டு வந்தது. கடைசியாக வந்தபோது மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. இந்நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பினை தொடர இயலாது என்றும், அதற்கான வழிவகை என்பது இல்லை என்பதையும் கூறியிருக்கிறார்கள்..
ஏனென்றால் 20 ஆயிரம் மாணவர்களை இந்திய பல்கலைக்கழகங்களில் சேர்த்தால் அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும். குறிப்பாக இந்திய மருத்துவத்தில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்கள். 20 ஆயிரம் பேர் இருக்கிறார்கள், அத்தனை பேரையும் சேர்ப்பது என்பது மிகப்பெரிய சவால்.. கல்விக்கான பாடத் திட்டங்கள் வெவ்வேறாக இருக்கும், இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கனவே படிக்கக்கூடிய கல்வி தரம் என்பது பாதிக்கப்படும்..
இந்திய பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடம் இல்லை, மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும், எனவே உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக் கழகங்களில் கல்வியை தொடர முடியாது என்று விளக்கமளித்துள்ளது. மேலும் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி மத்திய அரசு வெளிநாட்டில் இவர்கள் மருத்துவ படிப்புகளை தொடருவதற்கு ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.