Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் இந்திய மாணவன் பலி…. வெளியாகியுள்ள பரபரப்பு ஆடியோ….!!!

உக்ரைனில் இந்திய மாணவன் பலியான சம்பவம் குறித்த ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார்கிவ்  நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து ரயிலில் செல்ல முயன்ற போது நடந்த தாக்குதலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்தார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. நவீன் உயிரிழந்த சூழல் குறித்து, அவரின் உறவினர் கேட்டதற்கு மளிகை பொருட்கள் வாங்க வெளியே சென்ற நவீன், அப்பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் உயிர் இழந்துள்ளார். அவரது உடல் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. போர்ச்சூழல் என்பதால் உடலை மீட்டு இந்தியா கொண்டு வருவது கடினம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |