Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் இருக்கும் எனது சிறுத்தைகளை மீட்டுத் தாருங்கள்”… மத்திய அரசுக்கு டாக்டர் கோரிக்கை…!!!!

உக்ரைனில் இருக்கும் தன்னுடைய சிறுத்தைகளை மீட்டுத் தரக் கோரி மத்திய அரசுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்பிஎல் மருத்துவர் கிரி குமார் என்பவர் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டான்பாஸ் மாகாணத்தில் செவரோடோனஸ்க்கி நகரில் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அங்குள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை வீட்டில் வாங்கி வளர்த்து வந்துள்ளார். அப்போதுதான் பிப்ரவரி மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே என போர் தொடங்கியுள்ளது.

போரின் காரணமாக உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய நிலையில் தனது செல்ல பிராணிகளை விட்டு பிரிய மனம் இல்லாமல் இவர் அங்கேயே வசித்து வந்துள்ளார். போருக்கு மத்தியில் தனது வீடு, கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை விற்று தனது செல்ல பிராணிகளுக்காக உணவளித்து வந்த சூழலில் பணம் முழுவதும் செலவழிந்து விற்பதற்கு வேறு ஏதும் சொத்து இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அண்டை நாடான போலந்து சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார் அப்போதும் கூட தனது செல்ல பிராணிகளை பராமரிக்க ஒருவரை வேலைக்கு அமர்ந்த்தி விட்டு சென்றுள்ளார்.

தற்போது போலந்து நாட்டின் தலைநகர் வார்ஷாவில் தஞ்சம் அடைந்திருக்கின்ற கிரி குமார் உக்ரைனில் போர் தீவிரம் அடைந்திருப்பதால் தனது செல்ல பிராணிகளான இரண்டு சிறுத்தைகளையும் பத்திரமாக மீட்டு தர வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கூறியதை அடுத்து கிரி குமார் நேரடியாக மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |