Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருந்து அகதிகளாக …. “வருபவர்களுக்கு இங்கு இடம் இல்லை”…. ஜெர்மனி அறிவிப்பு…..!!!!!

உக்ரைனில் இருந்து அகதிகளாக வருபவர்களை தங்க வைக்க முடியாது என ஜெர்மனி தெரிவித்துள்ளது.

உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதில் ஏராளமானோர் ஜெர்மனி நோக்கி சென்றனர். அங்கு அவர்களுக்கு தங்கு இடம், உணவு வழங்கப்பட்டது. ஆனால் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அகதிகளை தங்க வைப்பதற்கு இடம் இல்லை என ஜெர்மனி தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உக்ரைன் ரஷிய போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இது எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. தற்போது விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு ஆகிய பிரச்சினைகளில் ஜெர்மனி மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இதனால் பலர் தங்களது வீடுகளில் அகதிகளை தங்க வைக்கும் நிலையில் இல்லை. எனவே அவர்கள் உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க வைக்க முடியாது.

இந்நிலையில் அவர்களுக்கு தேவை வாழ்வதற்கு ஒரு வீடு, குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம், பெற்றோர்கள் வேலைக்கு சென்றால் பிள்ளைகள் தங்க பகல் நேர காப்பகங்கள், போரை கண்டு பயந்து போய் வந்திருக்கும் சிறுவர்களுக்கு மனநல ஆலோசனை அளிக்கும் மையங்கள் என்று  அவர்களது தேவை நீண்டு கொண்டே செல்கிறது. மேலும் ஜெர்மனியில் உள்ள Aachen போன்ற  நகரங்களில் உடல்பயிற்சி கூடங்களில் உக்ரைன்  மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனையடுத்து சில கட்டிட உரிமையாளர்கள் உக்ரைன் மக்களுக்கு வீடு கொடுக்க மறுக்கின்றனர். ஆனாலும் கூட ஆதரவு அமைப்புகளை நடத்தி வரும் michaela lee முதலானோர் எப்படியாவது அகதிகளுக்கு தங்குமிடமும், தொழில் பயிற்சியும் கிடைக்க தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |