ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு விட்டாலும் இன்னும் ஏராளமானோர் அங்கு உள்ளனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனில் இருந்து இந்தியர்கள் இதுவரை 21,000க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு தெரிவித்ததாவது, “ஆப்ரேஷன் கங்கா” திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட 63 விமானங்கள் மூலம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளதாகவும், கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் உக்ரேனின் சிக்கியிருந்த 804 மாணவர்கள் டெல்லி அடைந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 360 மாணவர்கள் தாயகம் திரும்பி உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.