Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன்…. கடைசியாக பேசிய வீடியோ….!!!!

உக்ரைனில் நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவமானது இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா, அண்மையில் தனது பெற்றோருடன் பேசிய வீடியோ கால் பதிவு வெளியாகியுள்ளது. அதில் அங்கிருக்கும் நிலை குறித்து மாணவன் நவீனின் குடும்பத்தினர் சோகத்தோடு விசாரிப்பதும், அதற்கு நவீன் பதிலளித்து பேசுவதும் பதிவாகியுள்ளது.

Categories

Tech |