கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாநிலங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொலைக்காட்சி உரையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் கூறியதாவது. “உக்ரைன் ஒரு கைப்பாவை ஆட்சியைக் கொண்ட அமெரிக்க காலனி நாடாக செயல்படுகிறது” என்று அவர் கூறினார். இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாநிலங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்குமாறு ரஷ்ய ஆதரவு தலைவர்கள், அதிபர் புதினைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்கள் வேண்டுகோளுக்கு ஒப்புக்கொண்டு கிளர்ச்சியாளர்கள் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரிக்க ரஷியா முடிவுசெய்துள்ளது. இதனால் இரண்டு நகரங்கள் பிரச்சினைக்குரிய பகுதியாக இல்லாமல் தனி நகரங்களாக அழைக்கபடும் என்றும் அந்த நகரங்களின் தலைவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.