உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகளை மீட்டுத்தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரித்திகா என்ற மகள் உள்ளார். இவர் உக்ரைனில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரித்திகாவின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2 நாட்களாக உக்ரைனில் சிக்கித் தவிக்கும் எங்களது மகள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் மகளுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களது மகளை மீட்டுத் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.