Categories
உலக செய்திகள்

உக்ரைனில் சோகம்…! 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு… குவியல் குவியலாக புதைக்கப்பட்ட புகைப்படங்கள்…!!!!

ரஷ்யாவின் போரால் மரியு போல் நகரில் மட்டும் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து உக்ரைனில் மரியு  போல் நகரில் மட்டும் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்கள உயிரிழந்துள்ள நிலையில், குவியல் குவியலாக மனித உடல்கள் புதைக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்நாட்டின் தெற்கு பிராந்திய நகரமான மரியு  போலில்  தொடரும் தாக்குதலால் குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள் சிதைந்து கடந்த 12 நாட்களில் மட்டும் அங்கு1,500க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதுபற்றி உக்ரைன்  வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரே  குலேபா மரியு போல் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தாலும், இன்னும் அந்த நகரம் உக்ரைன்  கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றார். மரியு  போல் நகரில் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் குறைந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |