Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் தவித்து வரும்…. ஆந்திர மாணவர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு…..!!!!

உக்ரைனில் தவித்து வரும் ஆந்திர மாணவர்களுக்கான உதவி எண்ணை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று உக்ரைன்.  இதனால் ரஷ்யா  அந்நாட்டின் மீது அதிரடியாக போர் தொடுத்துள்ளது. இதில் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா நடத்திவரும் இந்த தொடர் வான்வழித் தாக்குதலில் உக்ரைன் நாட்டு ராணுவத்தில் அவருடன் சேர்ந்து பொதுமக்களும் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் பணி நிமித்தமாகவும் மற்றும் உயர்கல்விக்காவும் உக்ரைனில் தங்கியிருக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு உதவும் வகையில் இந்திய தூதரகம் அவசர உதவி எண்ணை வழங்கியுள்ளது.

இதனை அடுத்து உக்ரைனில் சிக்கி தவித்து வரும் ஆந்திரா மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் ஆந்திர அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி பி. ரவிசங்கர் (ஓஎஸ்டி) 9871999055, எம்.வி.எஸ் ராமாராவ் (உதவி ஆணையர்) 9871 990081, ஏஎஸ்ஆர்என் சாய்பாபு (உதவி ஆணையர்) 9871999430 மற்றும் [email protected]  தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவிக்கு 08632340678 வாட்ஸ்அப் 8500027678 என்ற உதவி எண்ணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |