உக்ரைன் மீதான ரஷ்ய போர் 57 வது நாளை நெருங்கியுள்ள நிலையில் ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் கர்னல்களையும் இழந்துள்ளது. அந்த வரிசையில் ரஷ்யா தனது 35வது ராணுவ கர்னல் மிகைல் நாகமோவ்வையும்(41) தற்போது இழந்துள்ளது. இவர் ரஷ்யாவின் மேற்கு எல்லையான சப்பர் படைப்பிரிவு ராணுவ கர்னலாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் உக்ரைன் ரஷ்ய போரில் உயர்ந்து விட்டதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது. இவருடைய இறுதிச் சடங்குகள் மைதிச்சி பகுதியில் உள்ள கூட்டாட்சி நினைவு கல்லறையில் வைத்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories