ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், தங்கள் நாட்டின் வான்வெளிப் பகுதியில் பறக்க டென்மார்க் தடை வித்துள்ளது. முன்னதாக லாட்வியா, லித்துவேனியா, எஸ்டோனியா, சுலோவேனியா, பல்கேரியா, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.