உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ஒரு மாதத்தை தாண்டியும் போர் நடைபெற்று வரும் நிலையில உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றி விட்டனர். அந்த வரிசையில் உக்ரைனின் மாட்டிசின் பகுதியை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் அப்பகுதியில் உள்ள பெண் தலைவர்களின் குடும்பத்தினரை கொலை செய்து புதைத்து விட்டதாக ஒரு பெரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மாட்டிசிம் பகுதியிலுள்ள ஒரு பெண் தலைவரின் கணவர் மற்றும் குழந்தைகளை சித்திரவதை செய்து பின்னர் அவர்களை கொன்று டிராக்டரால் ஒரு குழி தோண்டி அதில புதைத்துள்ளனர். அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. அதோடு கைகள் கட்டப்பட்ட நிலையில் மற்றுமொரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உலக நாடுகளை கொதிப்படைய செய்துள்ளது.