Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பெற்ற குழந்தைகள் உடலில் பெற்றோர் எழுதும் தகவல்கள்…. மனதை உருக்கும் புகைப்படம்…..!!!!!

ரஷ்ய தாக்குதலில் தாங்கள் இறந்துவிட்டால் குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைக்க வசதியாக இருக்க அவர்கள் முதுகில் குடும்பதகவல்களை உக்ரைனிய பெற்றோர் எழுதி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி மனதை உருக்கியுள்ளது. இத்தகவலை உக்ரைனிய பெண் பத்திரிக்கையாளர் தன் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் Vira என்ற சிறுமியின் முதுகில் அவரின் பிறந்த தேதி எழுதப்பட்டு இருக்கிறது. மேலும் சில எண்களும் எழுதப்பட்டுள்ளது. Viraவின் தாய் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு போர் காரணமாக எதாவது நேர்ந்தால் எனது மகளை யாராவது காப்பாற்ற இப்படி எழுதியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று Vira குறித்த தகவல்கள் அடங்கிய அட்டை அவர் உடையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதேபோல் உக்ரைனிய தந்தை ஒருவர் தன் மகள் டி-ஷர்ட்டின் எண்களுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். என் 5 வயது மகள் இந்த டிஷர்ட்டை அணிந்திருக்க, ஐரோப்பா ரஷ்ய எண்ணெய், எரிவாயு மற்றும் பணத்தைப் குறித்து யோசித்துக்கொண்டிருந்தது என வேதனையுடம் பதிவிட்டுள்ளார். நாங்களும் இதுபோன்று எங்களது குழந்தைகளின் உடலிலும், உடையிலும் தகவல்களை எழுதியுள்ளோம் என்று மேலும் சில பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |